பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, திருச்சிமாவட்டம் துறையூர் வட்டம் ஒட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த S. இந்துமதி என்கிற மாணவிக்கு பாராட்டுக்கள்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, துறையூர் ராஜ் வித்யாபவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி S.இந்துமதி 582/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் மூன்று பாடத்தில் 100/100 சென்டம் எடுத்துள்ளார். பொருளாதாரம்100, வணிகவியல் 100 அக்கவுன்டன்சி 100 தமிழ் 94, ஆங்கிலம் 93, மற்றும் பிசினஸ் கணிதம் பாடத்தில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். ஆக மொத்தம் 582. இந்த மாணவியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பள்ளி தாளாளர் திரு. K.V. செந்தில் ரெட்டி, சேர்மன் திரு. வரதராஜ் ரெட்டியார், பள்ளி முதல்வர் திரு. இராமசந்திரன் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக குழுவினர் உள்ளிட்ட அனைவரையும் ரெட்டிமலர் இதழும் ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளையும் பாராட்டுகிறது. மாணவி இந்துமதியின் தந்தை செல்வம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் மறைந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளி நிர்வாகம் இந்த மாணவியிடம் கல்வி கட்டணம் எதுவும் வசூல் செய்யாமல் கல்வி கட்டண விலக்கு அளித்ததும் பாராட்டுக்குறியது. இந்நிலையில் தாய் அமுதா அவர்களின் அரவனைப்பில் கல்வி கற்றுவரும் மாணவி இந்துமதியை பாராட்டி கல்வி உதவிதொகையாக ருபாய் 25,000/- யை ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு வழங்குகிறது. இவரின் ஆடிட்டர் கனவை நனவாக்கிட C.A வகுப்பிற்கான முதல் பருவ தொகை முழுவதையும் அறக்கட்டளை வழங்குகிறது. அவர் வாழ்க்கையில் வெற்றி பெற அறக்கட்டளை
வாழ்த்துகிறது.
இது போன்று ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிட அறக்கட்டளை கீழ் கண்ட தீர்மானங்களை இயற்றி உள்ளது. அதன் படி கல்லூரியில் உயர் கல்வி பெறும் மாணவ / மாணவிகள்,
1).95%மதிப்பெண் பெற்று பெற்றோரை இழந்த நிலையில் உள்ள மாணவர்/மாணவிகளுக்கு உதவுவது, 2).தந்தையையோ/தாயையோ இழந்து 95% க்கும் அதிகமான அளவில் மதிப்பெண் பெற்றுள்ள மாணவ/மாணவிகளுக்கு உதவுவது,
3)உண்மையில் ஏழை என அறக்கட்டளையின் ஆய்வில் உறுதி செய்ய பட்டவர்களுக்கு உதவுவது,
4) அரசு பள்ளியில் 95 %க்கு மேல் மதிப்பெண் பெற்ற அறக்கட்டளையின் விதிகளுக்கு உட்பட்ட எல்லா மாணவ/மாணவிகளுக்கும் முடித்த அளவில் கல்வி உதவியை அறக்கட்டளை வழங்கும். உதவி பெற விரும்புவோர் மின்னஞ்சல்/அலுவலக முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்,
வீ.செல்வராஜூ
ஓ.பி.ஆர்.அறக்கட்டளை
சென்னை.
oprtrust2020@gmail.com.