உறவுகளே,
கடந்த120 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் கொவைட்-19 தீநுண்மித் தொற்று, அசாதாரணமாக அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத நோய் பரவலைத் தடுப்பதற்காக, மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள், ஆராச்சியாளர்கள் இதனை தடுப்பதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் அவர்களுக்கே மிகப் பெரிய சவாலாக விளங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தற்போது பல பகுதிகளில் பொது முடக்கங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தாலும், கொரானா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அசுர வேகம் எடுப்பதற்கான அபாயம் தொடர்ந்து இருப்பதை மறுக்க முடியாது. கொரானா நோய் தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம். எனவே இந்த “கொரானா” வின் தொற்றிலிருந்து அனைவரும் தங்களை தற்காத்துக் கொண்டு நலமுடன் வாழ வேண்டும். கொரானா தடுப்பு மருந்து தயாராகும் வரை சொந்தங்கள் அனைவரும் தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கையில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான மருத்துவ மனைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் நோய்களுக்காக மருத்துவரை சந்திக்க வேண்டியிருப்பவர்களும் வெளியில் வர முடியாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடந்து துன்பத்தை அனுபவிக்கின்றனர். இந்த நிலையை போக்க கொரானாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தங்கள் வீட்டில் முறையாக மூச்சுப் பயிற்சி செய்து நுறையீரலை வலுவாக வைத்திருப்பது, புகை பிடிப்பதை தவிர்ப்பது, மதுஅருந்தும் பழக்கத்தால் நுரையீரல் பலவீனமாகி விடாமல் பாதுகாப்பது, இருமல், காய்ச்சல், மூச்சிரைப்பு வந்தால் உடனடியாக, கொவைட்-19 சோதனை செய்து கொண்டு மருத்துவ சிகிச்சைப் பெறுவது இவற்றில் கவனமாக இருந்தால் உயிரிழப்பை தவிர்க்கலாம்.கொரானா தவிர பிற நோய்கள் உள்ளவர்கள் நம் முன்னோர்கள் முந்தைய காலங்களில் கடைபிடித்த சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மருந்துப் பொருள்களில் பெரும்பாலானவை நம் வீட்டில் உள்ளவை. மிளகு, மஞ்சள், சீரகம், வெந்தையம், கடுகு, பெருங்காயம், தனியா, சோம்பு, சுக்கு, ஏலம், லவங்கப்பட்டை, கிராம்பு போன்ற மூலிகை பொருள்கள் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையவை. நம் முன்னோர்கள் கடை பிடித்த பாட்டி வைத்தியம் முறையிலும் தங்களை தற்காத்து கொள்ளலாம். கொரானா தாக்கம் தணியும் வரை அரசு சொல்லும் விதிகளை கடைப்பிடித்து நமக்கு நாமே நம்மை காத்துக் கொள்ள வேண்டும். நமது குடும்பத்தினை எண்ணி நாம் அனைவரும் இந்த இயற்கை இடையூரை வெற்றிகரமாக சமாளித்து நலமுடன் வாழ வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், நமது சங்க செயல்பாடுகளில் சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால், குடும்பவிழா, கலந்துரையாடல், மணமாலை 100 , நிர்வாகிகள் கூட்டம் போன்றவற்றை தற்போது நடத்த இயலாத சூழ்நிலை நிலவுகிறது. எனினும் வரும் நாட்களில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு,நமது உறவினை வளர்க்க, அதிக மதிப்பெண் பெற்றவர்களை பாராட்டிட, எவற்றை யெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை ஆன்லைன் மூலம் செய்வது குறித்து அனைவருடன் கலந்து ஆலோசித்து தக்க முடிவுகள் எடுக்கப்படும் என்பதை உறவுகள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போதைக்கு, நமது உறவுகளின் தேவைக்கு reddymalar06@gmail.com என்ற இ-மெயில் பயன் பாட்டினைக் கொண்டு, தங்கள் குடும்ப உறவுகள், மற்றும் உறவுகளின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். திருமண தகவல் பரிமாற்றத்திற்கான முயற்சியினை மேற்கொள் ள இந்த இ-மெயில் id யை பயன்படுத்துமாறு வேண்டுகிறோம். தங்களின் உடல் நலம், குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களின் உடல் நலத்தை நன்கு கவனித்து நலமுடன் இருக்கவும் உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம்.
ரெட்டி இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கு:
நமது ரெட்டி சமூகத்தின் எதிர்காலம் இளைஞர்களாகிய உங்களிடம் தான் உள்ளது. எனவே இக்கட்டான இந்த சூழலில் , நம் ஒவ்வொருவருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், மன உளைச்சல்கள் ஆகியவற்றை மறந்து, நமது ரெட்டி சமூக உறவுகளின் தேவைக்கும், ஒற்றுமைக்கும் ஒரு பாலமாக நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ரெட்டி சமூகம் சார்ந்த உடனடி செய்திகளை அறிய “ஆன்லைன் ரெட்டிமலர்” படியுங்கள், பிற குழுவிலும் இதனை பகிருங்கள்.
கல்வி நிலையங்கள், பயிற்சி வகுப்புக்கள் அனைத்தும் துவங்க உள்ள இத்தருணத்தில், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டிற்கான (EWS) விதியை பயன்படுத்தி, சான்றிதழ் பெற்று பயனடையவும். பிற சேவைகளுக்கு சங்கத்தினை அணுகவும் கேட்டுக்கொள்கிறோம். அன்புடன், வீ.செல்வராஜூ பொதுச்செயலாளர். ரெட்டி இளைஞர் பேரவை, ஓ.பி.ஆர்.அறக்கட்டளை, மற்றும் “ஆன்லைன் ரெட்டிமலர்” நிர்வாகம்.oprtrust2020@gmail.com,