சென்னையில் உள்ள ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக கடந்த 17.06.2020 முதல் தெலுங்கு மொழி எழுத, பேச கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகள் நாள் தோறும் மாலை 6.30 க்கு தொடங்கி இரவு 8.00 மணி வரை நடைபெறுகிறது் இதில் பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்வத்துடன் பதிவு செய்த 62 உறுப்பினர்களில் 25 பெண்கள், 37ஆண்கள் என பலரும் தங்களை இணைத்துக் கொண்டு தெலுங்கு மொழி கற்று வருகின்றனர். வகுப்பில் இரண்டு பேர் டாக்டர், இரண்டு பேராசிரியை, 3 கல்லூரி மாணவர்கள், 6 அரசு ஊழியர்கள். தவிர பெரும்பாலான இல்லத்தரசிகள் என பலரும் ஆர்வமுடன் இதில் பயின்று வருகின்றனர். இரண்டு மாதம் நடைபெறும் இந்த ஆன்லைன் வகுப்பு, வாரத்திற்கு ஐந்து நாள் நடைபெறுகிறது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை என வாரத்தில் 5 நாள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகள் அனைத்தையும் உறுப்பினர்களுக்கு ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை மூலம் இலவசமாக நடத்தி வருகிறோம் என ஓ.பி.ஆர் அறக்கட்டளையின் நிர்வாகி வீ.செல்வராஜூ தெரிவித்தார்.

ரெட்டி மலர்-மாத இதழ்