டாக்டர்.வி.ஜெயசந்திர பானு ரெட்டி ஐ.ஏ.எஸ் இவரது தந்தை பெயர் வி. ராமி ரெட்டி, சிங்கார பள்ளி என்கிற கிராமம்,பெஸ்ட வாரிபேட்டை, பிரகாசம் மாவட்டம் ஆந்திர பிரதேசம், இவரது  சொந்த ஊர்.
இவருடன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதிய 922 பேர் பல் வேறு துறைகளில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெற்றனர். 
இதில் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்த 8  பேர் தேர்வில் வெற்றி பெற்றனர். ரேங் முறையே 25, 54  பெற்றவர்கள் ஐ.ஏ.எஸ் பணிக்கும், 110 வது ரேங் பெற்ற பெங்களூரை சேர்ந்த செல்வன். கார்த்திக் ரெட்டி ஐ. பி. எஸ் பணியிலும் சேர்ந்தனர் எஞ்சிய ஐந்து பேர் செல்வி. B.ஸ்புருதி ரெட்டி-பெங்களூர் ( ஐ.ஆர். எஸ்.ரேங்-333) செல்வி.A.தீப்தி ரெட்டி, ஐ.ஆர். எஸ்.ரேங்-395) ஹதராபாத், திரு. கோபி தொந்தி ரெட்டி ஹதராபாத், ஐ.ஆர்.எஸ்.ரேங்-404), கடப்பாவை சேர்ந்த திரு. M.C.V. மகேஸ்வர் ரெட்டி ஐ.ஆர்.டி. எஸ்.ரேங் 512), புது டெல்லியை சேர்ந்த சேர்ந்த  ஜே.மேகநாத ரெட்டி, ஐ.ஆர்.பி எஸ்.ரேங்-626) என மெரிட் அடிப்படையில் ரெட்டி சமுதாய இளைஞர்/இளைஞிகள் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழக ரெட்டியார் சமுதாய இளைஞர்கள் இதில் இடம் பெற வில்லை.
டாக்டர்.வி. ஜெயசந்திர பானு ரெட்டி IAS

அருள்மிகு தண்டாயுத பாணிசுவாமி திருகோவிலில் தலைமைநிர்வாக அதிகாரியாக இருந்த டாக்டர்.வி. ஜெயசந்திர பானு ரெட்டி IAS அவர்கள் கடந்த 02.09.2020. அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.
         Dr.வி.ஜெயசந்திர பானு ரெட்டி (வயது 34), ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். 14.02.1986 ல் பிறந்த இவர், ஶ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் 2003 முதல் 2010 வரை MBBS  மருத்துவ படிப்பை படித்து, டாக்டர் பட்டம் பெற்றார். மருத்துவம் படித்திருந்தாலும்  இளம் வயது முதலே அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என  ஆசை கொண்டிருந்தார். அதற்கான பயிற்சியை மேற்கொள்ள தீவிரமாகவும் விரைவாகவும் முடிவெடுத்தார். அதற்காக கடின உழைப்பு தேவை என்பதை உணர்ந்து கொண்ட அவர், அதன்படி  செயல்படவும் தொடங்கினார்.ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கரை அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்றது.

2011ஆம் ஆண்டு UPSC நடத்திய ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி

 

    Dr.வி.ஜெயசந்திர பானு ரெட்டி ,2011 ல் நடைபெற்ற இந்திய ஆட்சிபணி தேர்வில் அகில இந்திய அளவில் 25 வது இடத்தில்  தனது முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அது சமயம் மத்திய அரசால் தமிழ் நாட்டிற்கு என  ஒதுக்கீடு செய்ய பட்டார்
முதலில் கடலூர் மாவட்டத்தில்உதவி கலெக்டராக பயிற்சி பெற்றவர்
       அரசு பணியில் முதன் முதலில் கடலூர் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சியை ஆகஸ்ட் 2011 முதல் செப்டம்பர் 2013 வரை 2 ஆண்டுகள் 2 மாதங்கள் மேற்கொண்டார். கடலூர் மாவட்டத்தில் விரிவான  கள பயிற்சி எடுத்துக் கொண்ட இவர், மொத்தம் 27 மாதங்களில் பரந்த கடலூர் பகுதியில் பொது நிர்வாகம், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், குற்றவியல் சட்டம், திட்டமிடல் மற்றும் மேலாண்மை, பொது நிதி மேலாண்மை போன்றவற்றில் பயிற்சி  பெற்றார்.

  திருச்சி மாவட்டத்தில் துணை கலெக்டர்

       கடலூரை தொடர்ந்து, செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2016 வரை ஏறத்தால             3 ஆண்டுகள் 1 மாதம் திருச்சிராப்பள்ளி மாவட்ட பகுதியில் துணை ஆட்சியராக பொறுப்பேற்றார். லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில்  துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டாக, பணிமாறுதல் பெற்று சிறப்புர பணிபுரிந்தவர். அதுசமயம், மாவட்டத்தில் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு துணைப்பிரிவின் பொது நிர்வாகம், நில நிர்வாகம் மற்றும் நில பதிவுகளை பராமரித்தல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்துதல், சுரங்கங்கள் மற்றும் தாதுக்களின் கட்டுப்பாடு, பேரிடர் மேலாண்மை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்டபல்வேறு துறைகளின் பணிகளையும் சிறப்பாக கவனித்தார்.

 குடி நீர் வடிகால்வாரியத்தில் இணை  மேலாண்மை இயக்குனர் பதவி

       சென்னையில், இணை நிர்வாக இயக்குநராக, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில்  செப்டம்பர் 2016 முதல் மே 2017 வரை, 9 மாதங்கள் பணிபுரிந்தார்.தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் என்பது , தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தொழில்துறையில் உள்ள நுகர்வோருக்கு வழங்கப்படும் நீர் வழங்கல் முறைகளை செயல்படுத்தவும் பராமரிக்கவும் கட்டளையிடப்பட்ட ஒரு முக்கிய அரசு நிறுவனமாகும். இதில் தலைமை நிர்வாக அலுவலருக்கு (நிர்வாக இயக்குநர்) இணை மேலாண்மை இயக்குநராக,  பணியமர்த்தபட்ட இவரின் நிர்வாகத்தின் கீழ் ஒரு நாளைக்கு 2000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) 34 மில்லியன்  தண்ணீர் பயண்பாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் விநியோகத்தை பராமரிப்பதில் தனது  தலைமைத்துவத்தையும் நிர்வாகத் திறமையையும் நிரூபித்தார்.

துணை செயலாளராக பதவி உயர்வு

      இதனை தொடர்ந்து, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில். துணைசெயலாளராக மே 2017முதல்  ஜூலை 2017 வரை, 3 மாதங்கள் பணிபுரிந்தார்.

வீட்டு வசதி வாரியத்தில் நிர்வாக இயக்குனர் பதவி (TNHB)

      தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (டி.என்.எச்.பி)நிர்வாக இயக்குனர்  பதவியில் அமர்த்த பட்டார். இதில் ஜூலை 2017 முதல்- மார்ச் 2018 வரை 9 மாதங்கள் பணிபுரிந்தார்.
       72.1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள தமிழக மாநில மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டமிடல், ஆலோசனை, உருவாக்கம் பட்ஜெட் மற்றும் சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.,பொது சுகாதார காப்பீட்டின் நிர்வாகம் அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது., பொது சுகாதார நிர்வாகம் அமைப்புகள்-முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் மக்கள் தொகை மட்டத்தில் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதார சேவையை கவனித்தார்.,கொள்கை வகுத்தல் மற்றும் சுகாதார கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் ஆகிய பணிகளையும் கவனித்தார்.

சுற்றுசூழல் மற்றும் வனத்துறையில் துணைசெயலாளர்

       மார்ச் 2018முதல் – செப்டம்பர் 2019 வரை 1 வருடம் 7 மாதங்கள் சென்னையில், தமிழ்நாடு அரசின், துணை செயலாளராக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் பணிபுரிந்தார். தமிழ்நாடு மாநில வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பொறுப்பை ஏற்றார். அப்போது  72.1 மில்லியன் மக்கள் தொகை மற்றும் 130,060 சதுர கி.மீ கொண்ட இந்தியாவில், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வனக் கொள்கையின் திட்டமிடல், ஆலோசனை, உருவாக்கம், பட்ஜெட் மற்றும் நடைமுறைப்படுத்தல் பணியினை மிகச்சிறப்பாக செய்தார்.
      சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை, மாசு கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை என அனைத்து துறையிலும் சிறந்த அனுபவத்தை பெற்றிருந்த டாக்டர்.வி.ஜெயசந்திர பானு IAS அவர்கள்,  தன் நிர்வாக  திறமையை  பணியாற்றும்  அனைத்து துறையிலும் வெளிப்படுத்தினார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில்செயல் அலுவலர்
      செப்டம்பர் 2019 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை அதாவது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும்வரை   1 வருடம் முழுமையாக  பழனிஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல் அலுவளராக சிறப்பாக பணியாற்றியதால், முருகன் அருளால் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவராக  மாறுதல் செய்யபட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவராக பொறுப்பேற்றார்

      கடந்த 02.09.2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவராக பதவி ஏற்று கொண்டார். நிதானம், அமைதி, அன்பு என அனைத்து வகையிலும் சாந்த மான சுபாவம் கொண்டவராக திகலும் டாக்டர்.ஜெயசந்திர பானு IAS நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்அளித்து பேசும்போது, ” நான்  தற்பொழுதுதான்   பொறுப்பேற்றுள்ளேன். இந்த மாவட்டம் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற கண்டிப்பாக முழு முயற்சி செய்வேன். அரசு வழிகாட்டுதலின்படி,கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வேன் என்று தெளிவாகவும் உற்சாகத்துடனும்” தெரிவித்தார். இவர் தமது பணியில் மேலும் பல உயர் பதவிகளை பெற ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளையும், ரெட்டி மலர்  பத்திரிக்கையும் வாழ்த்துகிறது.

      நேர்மை,திறமை கடின உழைப்பு இவற்றுடன் வாழ்வில் பல  முன்னேற்றங்களை கண்டுவரும்  டாக்டர்.வி.ஜெயசந்திர பானு ரெட்டி ஐ.ஏ.எஸ். அவர்கள், இன்றைய வளரும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். பலருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டும் இவரே ரெட்ட சமுதாய இன்றைய  இளைஞர்களின் நிஜ ஹீரோ. வாழ்த்துகிறோம்.

தமிழ்நாட்டில்  ஆர்வமுள்ள ரெட்டியார் சமுதாய ஏழை மாணவர்கள் சிவில் சர்வீஸ் எழுத விருப்பம் உள்ளவர்கள் ஓ.பி.ஆர் அறக்கட்டளை நடத்தும் “கே.ஆர்.டி. கேரீர் அக்காடமி” மூலம் இந்த தேர்விற்கான பயிற்சி பெறலாம். தவிர  விருப்பபடும் பிற கல்வி ஸதாபனத்தில் சேர்ந்து படிக்கவும் உதவி செய்ய அறக்கட்டளை தயாராக இருக்கிறது.

பிற நிறுவனங்கள் நடத்தும் நுழைவு தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் தொடர்பு கொள்வும். oprtrust2020@gmail.com.

9444077722

ரெட்டி மலர்-மாத இதழ்