ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பாக, ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசித்து வரும் பார்வை இல்லாத மாணவி ஆர். காவியா (D/o. P. ராமகிருஷ்ண ரெட்டி) அவர்கள், தற்பொழுது சென்னையில் தனது பட்ட படிப்பை மேற்கொள்கிறார். அவருக்கு வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், அவர் ஆன்லைன் மூலம் கல்வி கற்க மடிக்கணினி தேவை என ஓ.பி.ஆர். அறக்கட்டளைக்கு கோரிக்கை வைத்தார். அறக்கட்டளை நிர்வாகமும் அதனை உடனே ஏற்று மடிக்கணினி-யை ஓ.பி.ஆர். அறக்கட்டளையின் நிர்வாகி திரு எஸ். ரவீந்திர ரெட்டி அவர்கள் மூலம் மாணவியின் இல்லத்திற்கே நேரில் சென்று அறக்கட்டளை சார்பாக மடிக்கணினியை வழங்கியுள்ளார்.
இம் மாணவியின் முழு கல்வி செலவையும் ஏற்கனவே ஓ.பி.ஆர்.அறக்கட்டளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. இம்மாணவி ஆர். காவியா கடந்த ஆண்டு நடைபெற்ற +2 பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவு மெய்பட ஓ.பி.ஆர். அறக்கட்டளை என்றென்றும் துணையாக நிற்கும். மேலும், இதேபோல்,95% மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ,மாணவியர்,
மற்றும் ஆதரவற்றவர்கள் கல்வி கற்க ஓ.பி.ஆர். அறக்கட்டளையின் உதவியை நாடலாம்.இது குறித்த விவரங்களை பெற அந்தந்த மாவட்ட நிர்வாகத்தை அணுகவும்.
பிற விவரங்களுக்கு இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்:-
oprtrust2020@gmail.com