ரெட்டி மலர்-மாத இதழ்
மூன்று மாநில ரெட்டி நல சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் 04.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டதாகவும் 04.05. 2019 ஆணைப்படி தாசில்தார்கள் சான்றிதழ் வழங்க 09.07.2020 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரத்தை நீதி அரசர்களிடம் எடுத்துரைத்தார்.சங்கம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் இந்த தமிழ்நாடு அரசு கொடுக்கும் சான்றிதழை, 10 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றும் இதர மாநிலத்துக்கும் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கு பயன்படுத்துவது குறித்து விளக்கம் இல்லை என்று நீதியரசர்களிடம் எடுத்துரைத்தார்.நீதியரசர்கள் வழக்கறிஞரின் கோரிக்கை நியாயமானது தான் என்று அரசு வழக்கறிஞரிடம் எடுத்துரைக்க, அரசு வழக்கறிஞர் இது சம்பந்தமாக தமிழக அரசை கேட்டு சொல்வதாக கூறியதால், வழக்கு 16.07.2020 அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் கூறினார்.
-தகவல்.M.V.வைத்திலிங்கம்,