அந்த காலத்தில் நம் முன்னோர் அன்ன சத்திரங்கள் கட்டி வைத்து ஏழைகளுக்கு தர்மம் செய்து மகிழ்ந்தனர். கொடுத்து கொடுத்து
சிவந்த கரங்கள் பல, தங்களை அடையாளம் படுத்தி கொள்ளாது. ஆனால் ஊரறிய, உலகறிய ஓர் நல்ல காரியம் செய்யும் போது அதை பார்த்து பலரும் அதில் கரம் கோர்க்கலாம். அப்படிபட்டவர்களை இணைத்து, உதவி செய்து வருகிறது ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை.
கொரானா தொற்றுக்கு பிறகு கற்றலும், கற்பித்தலும் மாபெரும் மாற்றங்களை நோக்கி சென்று கொண்டு உள்ளன. நம் அறக்கட்டளை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துள்ளது.
“அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ” என்றான்
-மகாகவி பாரதி.

இதோ இப்பொழுது கூட
திருச்சி காவேரி மகளிர்
கல்லூரி முதல்வர் Dr.V.சுஜாதா அவர்கள் அண்மையில் ஆன்லைன் வகுப்பில் ஸ்மார்ட் போன் இல்லாமல் ஏழை மாணவிகள் 500 பேர் கல்வியை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வளர்கள் உதவிட முன்வர வேண்டும் என செய்தி வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை ஏற்றுக் கொண்ட நமது ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை 50 ஏழை மாணவிகளுக்கு 50 புதிய (VIVO Y91i,Block 2+32) ஸ்மார்ட் போன் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒன்றின் விலை ₹ 9,990.
50 போனின் மொத்த மதிப்பு ₹ 5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்). இதனை ஏழை மாணவிகளுக்கு வழங்கிட ஓ.பி.ஆர். அறக்கட்டளை சார்பில் கல்லூரி முதல்வர் திருமதி. Dr V. சுஜாதா அவர்களிடம் அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி திரு.வீ.செல்வராஜூ மற்றும் அறங்காவலர்கள் வழங்கியுள்ளனர். இதனால் 50 ஏழை மாணவிகள் தடையின்றி தனது கல்வி பயணத்தை தொடர வழிவகை செய்யபட்டுள்ளது. 12.08.2020 அன்று திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் தலைவர் திரு.K. திருநீலகண்டன் அவர்கள் கலந்து கொண்டு முன்னின்று ஓ.பி.ஆர். அறக்கட்டளை நிர்வாகிகளை வரவேற்று இந்த நல்ல செயலை ஊக்க படுத்துகிறேன் என்றும், கல்லூரி அறக்கட்டளை சார்பில் இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.அது சமயம் கல்லூரி குறித்த பல்வேறு நடவடிக்கைகளையும் நிகழ்வுகளையும் ஓ.பி.ஆர். அறக்கட்டளை நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.V சுஜாதா அவர்கள் ஓ.பி.ஆர். அறக்கட்டளை நிர்வாகி களுக்கு நன்றி தெரிவித்து பேசும்போது,”எங்கள் கல்லூரி சார்பில் உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த உதவி 100% ஏழை மாணவிகள் யார் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழங்கபடும். இதனால் அவர்கள் உற்சாகத்துடன் கல்வி பயிலவும் பேருதவியாக இது அமையும். மேலும் தமிழ்நாட்டிலேயே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதில் முன்னோடியாக திருச்சி காவேரி மகளிர் கல்லூரி திகழ்கிறது. இதே போன்று உள்ள ஏழை மாணவிகளு க்கு ஸ்மார்ட் போன் மேலும் தேவை படுகிறது. ஒருசில வீட்டுகளில் பயன்படுத்த படாமல் இருக்கும்
ஸ்மார்ட் போன்களையும் தன்னார்வலர் அமைப்புகள் சேகரித்து வழங்கினால் அதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். இதனால் மேலும் பல ஏழை மாணவிகள் பயன் பெறுவார்கள்” என்றார். நிறைவாக ஓ.பி.ஆர் அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி திரு.V.செல்வராஜூ அவர்கள் பேசும் போது, “கொரானா காரணமாக, உலக அளவில் கல்விக்கு அறிவிக்கபடாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.ஏழை மாணவர்களின் கல்வி நிலை இடை நிற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. அதனால் தான் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என முடிவெடுத்து ௹5,00,000/- மதிப்புள்ள 50 ஸ்மாரட் போன்களை ஓ.பி.ஆர். அறக்கட்டளை மூலம் வாங்கி திருச்சி காவேரி மகளிர் கல்லூரிக்கு வழங்கி உள்ளோம். இதனால் கிராமப்புற ஏழை மாணவிகள் பயன்பெறுவார்கள். கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டதை போல முடிந்த அளவு உபரியாக உள்ள பயன்படுத்தபடாமல் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் போன்களை திருச்சி காவேரி மகளிர் கல்லூரிக்கு நேரிலோ அல்லது ஓ.பி.ஆர். அறக்கட்டளை மூலம் அனுப்பி ஏழை மாணவிகள் கல்விபெற உதவி செய்ய இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி திரு.S.ரவீந்திர ரெட்டி, அறங்காவலர்கள் கோவை திரு.S.மோகன், MRL.திரு.P.மோகன், திரு.V.ஜெயகுமார், விழுப்புரம் மாவட்ட VIVO விநியோகஸ்தர்,  திரு. புருசோத்தமன் ரெட்டியார் மற்றும் திருச்சி மாநகர் எல்லையில் உள்ள வயலூர் கிளை சங்க தலைவர் Dr. ராஜகோபால், திரு. தர்மராஜ், சிந்தாமணி சங்க நிர்வாகி ஸ்டுடியோ திரு. நடராஜன், கிளை செயலாளர் திரு. கி.ரமேஸ், கருமண்டபம் கிளை சார்பில் கலந்து கொண்ட நிர்வாகி திரு.நா.பிரசன்னா கண்டோன்மெண்ட் கிளை நிர்வாகி திரு ராஜாராம், உறையூர் கிளை நிர்வாகி திரு.ஜனநாயகம்,துறையூர் தாலுக்கா ரெட்டி நல சங்க தலைவரும் மூன்று மாநில சங்க நிர்வாகியுமான திரு.K.R.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தமிழகம் அல்லாத பிற பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் முகநூல் வழியாகவோ அல்லது மின்னஞ்சலோ கொடுங்கள் விரைவில் உங்கள் பகுதியில் ஓ.பி.ஆர்.அறக்கட்டளையை வலுப்படுத்தி எதிர்காலத் தில் ஆக்கபூர்வ மான பணிகளில் நம் கவனத்தைசெலுத்துவோம்.
உங்கள் மூலம் இதனை அறிமுக படுத்தி நம் சொந்தங்களுக்கு அறப்பணி செய்வோம். உலகின் பிற நாடுகளில் இருக்கும் நண்பர்களும் எங்களோடு இணைந்து கொள்ளலாம்.
வாருங்கள் நம்மில் இல்லாதோருக்கு அள்ளி கொடுப்போம்,
உங்கள் பங்களிப்புடன் சமூகப் பணியில், என்றும்
ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை.
oprtrust2020@gmail.com
9444077722.

ரெட்டி மலர்-மாத இதழ்