நம் ரெட்டியார் சமுதாயம் தவமாய் தவம் இருந்து பெற்ற அருந்தவப் புதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்!
காந்தி போல்
கொண்டாடப்பட வேண்டியவர்…!
ஆனால்,
மறக்கப்பட்ட மனிதர்கள் பட்டியலில் இருக்கிறார்;
ஊழலும் லஞ்சமும்
பெருகிவிட்ட நிலையில்
தேசிய கீதம் போல்
ஆகிவிட்ட தேசத்தில்,
எளிமை,நேர்மை,நாணயம் தனது உயிர் மூச்சு என வாழ்ந்த ஒரு பனித ஆத்மா..!
பதவி வெறி பிடித்து அலையாமல், தான் வகித்த
முதல்வர் பதவியையே
தூக்கி எறிந்த 
இவர் தான்
இந்தியாவின்
இரண்டாவது மகாத்மா..!
இவரை,
குறைந்த பட்சம்
தமிழ்நாடு அளவில் போற்றி புகழ்ந்து கொண்டாடாமல் இருப்பது தமிழர்களும்,தமிழகமும் செய்த  சரித்திரப் பிழை..!
 
சுதந்திரத்தை நினைவு கூறும்
இந்த தருணத்தில்,
சுதந்திர இந்தியாவின்,
சென்னை மாகாணத்தின் முதன் முதல்வரை முக நூல் பக்கத்தில் அதிகம் பகிர்ந்து….
நம் ரெட்டி இன மக்கள் நினைவு கூர்வோம்!
 
ரெட்டியார் குரல் ஒலிக்கட்டும்!
ஓமந்தூரார் புகழ் பரவட்டும்…!
 
ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை
சென்னை.
 
ரெட்டி மலர்-மாத இதழ்