காவடிச்சிந்து புகழ்” அண்ணாமலை ரெட்டியார்
முனைவர்சி.சேதுராமன் இசைத்தமிழ், மாந்தர்நெஞ்சங்களை இசையவைக்கும் திறன்கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் “சிந்துஇசை” என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச்செய்து, நாடி, நரம்புகளைத் தூண்டித் துள்ளச்செய்யும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார்…