ரெட்டி இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் வீ.செல்வராஜிடம் அவர்களின் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் s.ரவீந்தர ரெட்டி, மகளிர் அணி பொதுச்செயலாளர் திருமதி தேவி மோகன்,துணை தலைவர்கள் முடிச்சூர் C.P.R. தாமோதரன்,MRL.P.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது பேசிய அதன் பொதுச்செயலாளர் வீ.செல்வராஜி அவர்கள்:
மறைந்த உத்தமர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ பி ராமசாமி ரெட்டியார் அவர்களின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் நிறுவப் போவதாக அறிவித்த முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
மேலும் ஓபிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நிறுவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
32 உட்பிரிவுகளைக் கொண்ட ரெட்டியார் சமூகத்தில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் கொண்டா ரெட்டி அவர்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கஞ்சம் ரெட்டி சார்ந்தவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
எனவே கஞ்சம் ரெட்டியை சார்ந்தவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் தமிழகத்தில் உயர்சாதி (OC)ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.