M.V.வைத்திலிங்கம்M.V.வைத்திலிங்கம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய,மாநில அரசுகளின் மீது, 04.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன்
கடந்த 13.06.2920 அன்று மூன்று மாநில ரெட்டி நல சங்கம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை 30.06.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நோட்டீஸ் அனுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்தது. இவ்வழக்கு 13.07.2020 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் தமிழக அரசு, 04.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், இனி தாசில்தார்கள் EWS சான்றிதழ் அளிக்க எந்த தடையும் இல்லை என்று 09.07.2020 தேதியில் தற்பொழுது அரசாணை வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து மூன்று மாநில ரெட்டி நல சங்க செயல் தலைவர் M.V.வைத்திலிங்கம் பேசும் போது அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார். இதனால் இனி 72 உயர் சாதியை சேர்ந்த ஏழைகளுக்கு மத்திய அரசில் வேலை மற்றும் கல்விகற்க வாய்ப்பு கிடைக்கும் எனவும், தமிழக அரசு விதித்த தடை இன்று முதல் நீங்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்த திண்டிவனம் வழக்கறிஞர் திரு. ஜி.கிருபாகரன் அவர்களுக்கும், தக்க ஆலோசனை வழங்கி வழி காட்டிய மூன்று மாநில ரெட்டி நல சங்க செயல் தலைவர் வழக்கறிஞர் திரு.M.V. வைத்திலிங்கம் ரெட்டியார் அவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில் உயர் சாதியை சேர்ந்த ஏழைமக்களுக்கு
தமிழ் நாட்டிலும் இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும், இதற்கு 72 உயர் சாதி உட் பிரிவினரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. தற்போது ஆளும் இவர்கள் அரசின் கொள்கை முடிவு இது என 10% இட ஒதுக்கீடு வழங்காமல் புறக்கணித்தால் நாமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், இதனை எதிற்கும் அரசியல் கட்சிகளை நாம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் எனவும் உயர் சாதி ஏழை மக்கள் சார்பாக சைவ வெள்ளாளர்,முதலியார்,
பிராமணர், ரெட்டியார் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் குரல் எழுப்பிவருகின்றனர்.

ரெட்டி மலர்-மாத இதழ்