ரெட்டி மலர்-மாத இதழ்
ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை உறுப்பினர் பா.தாமோதரன் தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில், ரோட்டரி கிளப் ஆப் ஹால்மார்க், ஹோமியோபதி மருத்துவர் Dr. செந்தில் குமார் மற்றும் முடிச்சூர் குடியிருப்போர் நலசங்கங்கள் கூட்டமைப்பு இணைந்து, அன்னை இந்திரா நகர் மற்றும் அரசன் அவின்யூ ஆகிய பகுதியில் உள்ள சுமார் 750 குடும்பங்களுக்கு கொரானா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் Arsenic Album 30 மாத்திரைகள் மற்றும் முக கவசங்களையும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் மூலமாக வீடு விடாக சென்று வழங்கினர்.இதற்கு பொது மக்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.